News January 2, 2025
முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு திறன் பயிற்சி

தேனி மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் சார்ந்தோருக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பற்ற பதினாறு முதல் 36 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் வாயிலாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. முன்னாள் படை வீரர்கள் மகன் மற்றும் மகள் கல்விச் சான்றிதழ் ஆவணங்களுடன் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் விருப்பங்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தகவல்.
Similar News
News August 5, 2025
தேனி – இயல்பை விட அதிகமாக கொட்டித் தீர்த்த கனமழை

தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது பெய்துவரும் கனமழையால், வைகை அணை நீர்மட்டம் 69 கனஅடியை எட்டியதால், வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் இயல்பை விட 78 மி.மீ அதிகமாக மழை பதிவாகியுள்ளது.
News August 5, 2025
தேனி: டிகிரி போதும்., ரூ.1.5 லட்சம் வரை சம்பளம்!

தேனி மக்களே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பணிபுரிய பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 126 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி, பொறியியல், MBA என பல்வேறு பட்டப்படிப்பு படித்தவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ப சம்பளம் – ரூ. 20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். ஆகஸ்ட் 17க்குள் இங்கே <
News August 5, 2025
தேனியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

தேனி மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.