News January 2, 2025
பிப்.1ம் தேதி ஊரக திறனாய்வுத் தேர்வு

கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட ஊரக திறனாய்வுத் தேர்வு பிப்.1ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 தேர்வர்களுக்கு (50 மாணவிகள் + 50 மாணவர்கள்) 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்கும் காலத்திற்கு படிப்புதவித் தொகை ஆண்டுதோறும் ரூ.1000 வீதம் வழங்கப்படும். 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம்.
Similar News
News September 14, 2025
BREAKING: அசாமில் நிலநடுக்கம்

அசாமில் சற்றுநேரத்திற்கு முன்பு (இன்று மாலை 4.41 மணிக்கு) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சோனிட்புர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். பாதிப்பு குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. கூடுதல் விவரங்களை அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.
News September 14, 2025
உப்பை குறைங்க 100 வயசு வரை வாழலாம்

ஜப்பானில் 100 வயதை கடந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. இதில் 88% பேர் பெண்கள். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதும், மீன், காய்கறிகள் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதும் அவர்களின் நீண்ட ஆயுளுக்கு முக்கிய காரணமாம். அதுமட்டுமல்ல, ஜப்பானியர்கள் உணவில் உப்பின் அளவை குறைவாக பயன்படுத்துவதும் மாரடைப்பு, புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து அவர்களை பாதுகாத்து ஆயுளை நீட்டிக்கிறதாம்.
News September 14, 2025
1 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2GB இலவசம்

சுதந்திர தின சலுகையாக அறிவிக்கப்பட்ட ‘BSNL Freedom Offer’ நாளையுடன்(செப்.15) நிறைவடைகிறது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு ₹1-க்கு புதிய சிம் கார்டு வழங்கப்படும். அதில், 30 நாள்களுக்கு அதிவேக 4ஜி டேட்டா (தினமும் 2 GB), 100 SMS மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு உங்களுக்கு அருகில் உள்ள BSNL மையங்களை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடனே முந்துங்கள்!