News January 2, 2025
பாமக எம்எல்ஏ அருள் கைது

சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டதை கண்டித்து, சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக எம்எல்ஏ அருள் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளதாகவும், இதை ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற சௌமியாவை, போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 19, 2025
INDIA கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?

INDIA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்கள் நேற்று தீவிர ஆலோசனை நடத்திய நிலையில், வேட்பாளரை தேர்வு செய்யும் இறுதி அதிகாரம் காங்., தலைவர் கார்கேவிற்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் 21-ம் தேதியுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற உள்ள நிலையில், பாஜக தலைமையிலான NDA கூட்டணி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
News August 19, 2025
1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தமிழ்நாட்டில் உள்ள 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது, பாம்பன், கடலூர், நாகை, காட்டுப்பள்ளி உள்ளிட்ட அனைத்து துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவான நிலையில், இன்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
News August 19, 2025
CM-ஐ சந்திக்கும் நயினார்.. ஏன் தெரியுமா?

துணை ஜனாதிபதி தேர்தலில் NDA கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு CM ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைக்க இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு தமிழருக்கு கிடைக்கவிருக்கும் மாபெரும் பெருமையை, அரசியல் எல்லைகளை தாண்டி அனைவரும் ஆதரித்தோம் என வரலாற்றில் பேசப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.