News January 2, 2025

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான பனிமூட்டம் காணப்படும்

image

சென்னையில் அடுத்த வரவுள்ள 2 நாட்களுக்கு அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 31 – 32 டிகிரி செல்சியசை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 11, 2025

சென்னை: குளியலறையில் சடலமாக கிடந்த நபர்

image

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அபுல் ஓசன். இவர், மணலி, சின்னசேக்காடு, கோவிந்தசாமி தெருவில், தன் உறவினர் முஜிபுர்கான் என்பவருடன் தங்கி, ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை, குளியலறைக்கு சென்ற அபுல் ஓசன், வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த உறவினர், கதவை திறந்து பார்த்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. மணலி போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.

News November 11, 2025

டெல்லி கார் வெடிப்பு; சென்னை முழுவதும் சோதனை!

image

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்ந்து சென்னையில் உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று மாலை கார் வெடித்து 13 பேர் உயிரிழந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் சென்னை புறநகரில் இரவு முதல் தீவிர கண்காணிப்பு ரோந்து பணியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக விமான நிலையம் சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

News November 11, 2025

சென்னை எம்டிசிக்கு தேசிய அளவில் விருது

image

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் (MTC) தேசிய அளவில் “சிறந்த பொது போக்குவரத்து அமைப்பு” என்ற விருதை பெற்றுள்ளது. மின்சார மினிபஸ்கள் அறிமுகம், பெண்களுக்கு இலவசப் பயண திட்டம், டிஜிட்டல் டிக்கெட் முறை, மற்றும் 660க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சேவை போன்ற அம்சங்கள் இதற்குக் காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விருது, சென்னையின் பொதுப் போக்குவரத்து தரத்தை உயர்த்தியுள்ளது.

error: Content is protected !!