News January 2, 2025
ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடைசி வாய்ப்பு!

போலி ரேஷன் கார்டுகளை கண்டறிய, ரேஷன் அட்டைதாரர்கள் சுய விவரங்களை (KYC) அப்டேட் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது, சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு, ஆதார் விவரங்களை கொடுக்க வேண்டும். இல்லையெனில், ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். இதற்கான காலக்கெடு டிச.31 உடன் முடிவடைந்த நிலையில், அவகாசத்தை இன்னும் சில நாட்களுக்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது. எனவே இதனை விரைந்து முடிப்பது நல்லது.
Similar News
News March 16, 2026
தங்கம் விலை மளமளவென குறைந்தது

சர்வதேச சந்தையில் வாரத்தின் முதல் நாளே தங்கத்தின் விலை சரிவுடன் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் தங்கம் $70 சரிந்து $4,985-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி 1 அவுன்ஸ் $1 குறைந்து $79 ஆக உள்ளது. ஏற்கெனவே, சனிக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,120 குறைந்து ₹1,18,080-க்கும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இன்றும் பெரிய அளவில் விலை குறைய வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
News March 16, 2026
தவெகவுக்கு பாஜக நெருக்கடி கொடுக்கவில்லை: பொன்னார்

CBI மூலம் தவெகவை கூட்டணி சேர வைக்க பாஜக நெருக்கடி கொடுப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், இதுதொடர்பான கேள்விக்கு, அரசின் அமைப்புகளை பயன்படுத்தி விஜய்யை மிரட்டுவதாக கூறுவது உண்மையல்ல என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தவெகவுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை என கூறிய அவர் கூட்டணி அமைப்பதற்கு பாஜகவின் தொண்டர்களின் பலமே போதும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News March 16, 2026
OTD:சத்தில் சதம் அடித்த சச்சின்

யாரும் நெருங்க முடியாத சாதனையை சச்சின் படைத்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்த முதல் மற்றும் ஒரே பேட்ஸ்மேன் என்ற சாதனைதான் அது. ஆசிய கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக 114 ரன்கள் எடுத்து இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார். தற்போது விளையாடி வரும் வீரர்களில், விராட் கோலி (85) மட்டுமே அந்த மைல்கல்லை நெருங்கி இருக்கிறார்.


