News January 2, 2025

மேலூரில் ஜன.10ல் விசிக ஆர்ப்பாட்டம்

image

அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூர் மற்றும் அரிட்டாபட்டி பகுதியில் பல்வேறு கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜன.10ஆம் தேதி மேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி மேடை அமையும் இடத்தை மாவட்ட செயலாளர் அரச முத்துப்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்றிரவு ஆய்வு செய்தனர்.

Similar News

News December 24, 2025

மதுரை பற்றி நீங்கள் அறியாத சிறப்புகள்

image

மதுரையைப் போல வேறு எந்த நகருக்கும் மொழிச் சிறப்பு கிடையாது; மதுரை மாதிரி எங்கும் தமிழ்ச் சங்கங்கள் இருந்ததில்லை. உலக நீதி நூலான திருக்குறள் மதுரையில் தான் அரங்கேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போர் 1965ல் மதுரையில் தான் துவங்கியது. மதுரை கிழக்கு நாடுகளின் ஏதென்ஸ் என்று கிமு.3ஆம் நூற்றாண்டில் மெகஸ்தனிஸ் குறிப்பிடுகிறார். இதனாலேயே மதுரை தமிழ் வளர்த்த நகரம் என அறியப்படுகிறது *ஷேர் பண்ணுங்க

News December 24, 2025

மதுரை: தொழில்முனைவோர் ஆகுறது உங்க கனவா?

image

மதுரை வாசிகளே! தொழில் முனைவோர்களை ஊக்கபடுத்தும் விதமாக தமிழக அரசின் தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (NEEDS) உள்ளது. ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி இத்திட்டத்தில் கடனுதவி பெறலாம். இதற்கு விண்ணப்பித்து உங்கள் தொழில் முனைவோர் கனவை நினைவாக்குங்கள். இங்கு <>CLICK<<>> செய்து அப்ளை செய்து கொள்ளுங்கள். மேலும் தகவல்களுக்கு மதுரை மாவட்ட தொழில் மையத்தை அனுகவும். SHARE பண்ணுங்க.

News December 24, 2025

போதையில் வீட்டுப் படியில் தடுமாறி விழுந்த எலக்ட்ரீசியன் பலி

image

திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி மகன் பாண்டியராஜ்(32). எலக்ட்ரீசியனான இவர் மது போதைக்கு அடிமையானவர். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் முழு போதையில் வீட்டிற்கு வந்தவர் வீட்டுப் படி ஏறிய போது தடுமாறி கீழே விழுந்ததில், தலையில் அடிபட்டது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!