News January 2, 2025
நிலக்கடலைக்கு ‘ஜிப்சம்’ இடுவது அவசியம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டையபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் நிலக்கடலை பயிர் செய்கின்றனர். இப்பகுதிகளில் உள்ள நிலங்களில் நுண்ணூட்டச் சத்து குறைவாக இருப்பதால் ஜிப்சம் இடுவதன் மூலம் நிலக்கடலையில் பருமன் ஒரே சீராக இருப்பதுடன், திரட்சியாகவும் மாறுவதற்கு உதவுகிறது என வேளாண்மை துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.
Similar News
News December 6, 2025
தூத்துக்குடி: பேருந்து சக்கரத்தில் சிக்கி போட்டோகிராபர் பலி

முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார்(36), போட்டோகிராபர். இவர் நேற்று தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் உள்ள டைடல் பார்க் அருகே டூவீலரில் வந்து கொண்டிருந்த போது, அங்கு இருந்த பேரிக்கார்டு மீது தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த அரசு பேருந்து மோதி அதன் சக்கரத்தில் சிக்கி ராம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 6, 2025
தூத்துக்குடி: இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி, துளசிபட்டி, பிள்ளையார் நத்தம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE
News December 6, 2025
தூத்துக்குடி: விவசாயிகளுக்கு குட் நியூஸ்! ரூ.1,250 மானியம்

கோவில்பட்டி, எட்டையாபுரம் வட்டார பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். பருத்திப் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்படுகிறது. இந்தபூச்சிக்கொல்லி மருந்தை ட்ரோன் மூலம் அடிப்பதன் மூலம் செயல்திறன், கூலி, நேரம் ஆகியவை மிச்சமாகிறது. எனவே டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க அரசு ஒரு ஹெக்டருக்கு ரூ.1,250 பின்னேற்பு மானியமாக வழங்குகிறது என வேளாண் துறை தெரிவித்துள்ளது.


