News January 2, 2025

வெறும் விளம்பரத்திற்காக போராட்டம் நடத்துவதா?

image

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன் என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுத்த நீதிபதி, வெறும் விளம்பரத்திற்காக போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகச் சாடினார். சமூகத்தில் பெண் என்ற பாகுபாடு இருப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் எனவும், இப்படியொரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்க பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Similar News

News September 18, 2025

மருத்துவமனையில் நடிகர் ரோபோ சங்கர்.. HEALTH UPDATE

image

நடிகர் ரோபோ சங்கர் சுயநினைவுடன் இருப்பதாக அவரது மகள் இந்திரஜா கூறியுள்ளார். நேற்று ஷூட்டிங்கின்போது திடீரென மயங்கி விழுந்த ரோபோ சங்கர், தனியார் ஹாஸ்பிடல் ஒன்றில் ICU-வில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் பரவியது. இதனிடையே, மயக்கத்திற்கு LOW BP தான் காரணம் எனவும் தனது தந்தை விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News September 18, 2025

ஆரோக்கியமான உடலுக்கு

image

வாழ்க்கையில் பெரிய பலன்கள், பெரும்பாலும் குட்டி குட்டி தினசரி பழக்கங்கள் மூலம் ஏற்படுகின்றன. அவற்றை நாம் தினமும் கடைப்பிடிப்பதன் மூலம் நமது ஆற்றல் மேம்படும், நல்ல தூக்கத்தையும் பெறலாம். அந்த குட்டி குட்டி பழக்கங்கள் என்ன என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக பாருங்க. இதில், எதை முதலில் தொடங்க இருக்கீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.

News September 18, 2025

ராகுலின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தேர்தல் ஆணையம்

image

ராகுல் காந்தி கூறிய <<17748198>>குற்றச்சாட்டுகள்<<>> தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆலந்த் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களை நீக்க நடந்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும், அது குறித்து புகார் அளித்து விசாரணை நடைபெறுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது. எந்தவொரு வாக்கையும் ஆன்லைன் மூலமாக நீக்க முடியாது என ECI திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

error: Content is protected !!