News March 25, 2024
மக்களவைத் தேர்தலில் கார்கே மருமகன் போட்டி

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தனது மருமகன் ராதாகிருஷ்ண தொட்டமணிக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். குல்பர்கா தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்ற கார்கே, கடந்த 2019 தேர்தலில் தோல்வியடைந்தார். இதனால், இந்தத் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை. இந்நிலையில் கார்கேவின் மருமகனை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
Similar News
News February 2, 2026
நாட்டுக்கோழி Vs பிராய்லர் முட்டை: குழந்தைக்கு எது Best?

பொதுவாக பிராய்லர் முட்டையை விட நாட்டுக்கோழி முட்டைதான் நல்லது என்ற ஒரு பார்வை இருக்கிறது. ஆனால், 2 முட்டைகளுமே சரிசமமான சத்துக்களை கொண்டவைதான். புரதம், வைட்டமின்கள், ஒமேகா 3 என அனைத்தும் சமமாகவே இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். 2 கோழிகளும் வளர்க்கப்படும் சூழலை வைத்தே வெள்ளை முட்டை பற்றிய தவறான புரிதல் உருவாகியிருக்கிறது. எனவே 1+ வயது குழந்தைக்கு எந்த முட்டையை வேண்டுமானாலும் கொடுக்கலாம். SHARE.
News February 2, 2026
தர்மேந்திரா இருந்திருந்தால்.. மனைவி ஹேமமாலினி உருக்கம்

பாலிவுட்டின் ஹீ-மேன் என அழைக்கப்பட்ட தர்மேந்திரா உடல்நலக் குறைவால் கடந்த நவம்பரில் காலமானார். மறைவுக்கு பிறகு அவருக்கு பத்ம விபூசண் விருதை மத்திய அரசு அறிவித்தது. இதுகுறித்து உருக்கமாக பதிவிட்டுள்ள அவரது மனைவியும் நடிகையுமான ஹேமமாலினி, இது தங்களுக்கும், நாட்டுக்கும் மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டார். முன்பே அறிவிக்கப்பட்டிருந்தால் தர்மேந்திராவும் சந்தோஷப்பட்டிருப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News February 2, 2026
டி20 WC பயிற்சி ஆட்டம்: தமிழக வீரர் அதிரடி சதம்!

2026 டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஏ அணி வீரரான ஜெகதீசன் 49 பந்தில் சதமடித்து (104) அசத்தியுள்ளார். USA-வுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆயுஷ் பதோனி தலைமையிலான இந்திய ஏ அணி 238 ரன்கள் குவித்தது. ஜெகதீசனுக்கு உறுதுணையாக பதோனி (60*), திலக் வர்மா (38) ஆகியோரும் சிறப்பாக ஆடினர். கடின இலக்கை நோக்கி ஆடி வரும் USA அணி, 50 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது.


