News January 2, 2025
வீரவநல்லூர் பூமிநாதர் கோவிலில் திருவாதிரை திருவிழா

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் மரகதாம்பிகை உடனுறை பூமிநாதர் சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா வரும் 4ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. 10ம் தேதி காலை 7:00 மணிக்கு நடராஜர் காப்பு கட்டு, இரவு 7.45 மணிக்கு நடராஜர் சிகப்பு சாத்தி பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளல் நடக்கிறது. 12ம் தேதி அதிகாலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 13ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
Similar News
News November 3, 2025
மாவட்டத்தில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (நவ.3) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News November 3, 2025
நெல்லையில் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு; சிறுமி உயிரிழப்பு

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (நவம்பர் 3) நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்று வயது சிறுமி உயிரிழந்தார். இவ்வாறு இந்த நிமோனியா காய்ச்சலால் மூன்று வயது சிறுமியின் உயிரிழப்பு நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.
News November 3, 2025
தொந்தரவு செய்தால் நடவடிக்கை – கலெக்டர் அட்வைஸ்

ஆட்சியர் சுகுமார் இன்று அளித்த பேட்டியில், வாக்கு சாவடி அதிகாரிகள் சிறப்பு திருத்தபட்டியல் சரிபார்ப்பு பணியின் போது அரசியல் கட்சி முகவர்கள் உடன் செல்ல அனுமதி உள்ளது. அரசியல் கட்சிகளின் சந்தேகங்களை கலைய முகவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பின் போது தொந்தரவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.


