News January 2, 2025
அணையில் விழுந்த மாணவர் உடல் மீட்பு

திண்டுக்கல், எ.வெள்ளோடு அருகே கோம்பை ஆனை விழுந்தான் அணையில், நேற்று மூழ்கிய கல்லூரி மாணவன் வில்சன்ஜெரோம் உடலை 2-வது நாளாக 30 பேர் கொண்ட தீயணைப்புபடை வீரர்கள் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வில்சன்ஜெரோம்-ன் உடலை மீட்டனர். அம்பாத்துரை போலீசார் வில்சன்ஜெரோமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 17, 2025
திண்டுக்கல்: மகன் முன்னே தந்தை பரிதாப பலி!

திண்டுக்கல்: திருப்பூரைச் சேர்ந்த அபுபக்கர்(37), தனது மகன் ரபீக்(12) உடன் பாளையம் – அரவக்குறிச்சி சாலையில் பைக்கில் வந்துகொண்டிருந்தார். அப்போது பைக் டயர் திட்டிரென பஞ்சரானதால் பைக் தடுமாறி விழுந்தது. இதில், அபுபக்கர் படுகாயமடைந்தார். அவரது மகன் ரபீக் காயமின்றி தப்பினார். அபுபக்கரை மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News October 17, 2025
திண்டுக்கல்: மருமகனை கொன்ற மாமனார்!

திண்டுக்கல்: எரியோடு பண்ணப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் சௌபரணி புதுக்கோட்டையைச் சேர்ந்த கௌதம் என்பவரை 2021-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சம்பவத்தன்று மாமனார் சரவணன், அவரது நண்பர் வேலுச்சாமி ஆகியோர் சீலப்பாடி அருகே காரில் வரும்போது மருமகன் கௌதம் கீழே தவறி விழுந்து விபத்தில் இறந்ததாக சொல்லப்பட்ட நிலையில், போலீஸ் விசாரணையில் மாமானாரே தள்ளி விட்டு கொன்றது தெரிய வந்தது.
News October 17, 2025
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி நாளன்று காலை 7 முதல் 8 மணி மற்றும் இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.