News March 25, 2024
இந்தியா, ஆஸி டெஸ்ட் தொடரில் மிகப் பெரிய மாற்றம்

இந்தியா, ஆஸி இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட தொடராக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3 போட்டி கொண்ட தொடராக நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 4 தொடர்களில் இந்தியாவின் ஆதிக்கமே நிறைந்திருந்தது. இதற்கு ரசிகர்கள் இடையே வரவேற்பு அதிகரித்தது. இதை கவனத்தில் கொண்டு, 5 போட்டிகள் கொண்ட தொடராக விரிவுப்படுத்த இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் முடிவு செய்துள்ளன.
Similar News
News January 19, 2026
விஜய் படம் ரிலீஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய்யின் ‘தெறி’ ரீ-ரிலீஸை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக கலைப்புலி தாணு அபிஷியலாக அறிவித்துள்ளார். முன்னதாக, ஜன.15-ல் அறிவிக்கப்பட்ட தெறி ரீ-ரிலீஸ் புதிய படங்களின் வரவால், ஜன.23-க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் <<18893477>>திரெளபதி 2, ஹாட்ஸ்பாட் 2<<>> பட தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று ரீ-ரிலீஸ் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜன நாயகனை தொடர்ந்து தெறி படமும், தற்போது வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
News January 19, 2026
விஜய்யிடம் துருவித் துருவி கேள்விகளை கேட்ட CBI

விஜய்யிடம் 2-வது முறையாக CBI நடத்தும் விசாரணையில் பல கிடுக்குப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. *கூட்டநெரிசல் தொடர்பான தகவல் எப்போது கிடைத்தது? *பிரசார வாகனத்தில் இருந்து கூட்ட நெரிசலை பார்க்க முடியவில்லையா? * கரூர் – திருச்சி வரையிலான பயணத்தில், நெரிசல் சம்பவம் தொடர்பாக யார் யாரிடம் பேசி, எந்த தகவலை பெற்றீர்கள்? *போலீஸ் அதிகாரிகளின் எச்சரிக்கை மீறப்பட்டதா? உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
News January 19, 2026
தமிழகத்திற்கு Goodbye சொன்ன வடகிழக்கு பருவமழை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியதாக IMD அறிவித்துள்ளது. இதன் காரணமாக 22-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், அதேசமயம் வரும் 23-ல் இருந்து 25-ம் தேதி வரை TN மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கணித்துள்ளது. மேலும் 20-ம் தேதி வரை நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் IMD கூறியுள்ளது.


