News January 2, 2025
‘கருங்கண்ணி’ பருத்திக்கு புவிசார் குறியீடு – மனு

தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் விளையும் ‘கருங்கண்ணி’ பருத்தியானது அப்பகுதி மண்ணுக்கு ஏற்ப பிரத்தியேகமாகவும், மிகவும் சிறப்பு வாய்ந்த பருத்தியாக வியாபாரிகளால் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அப்பகுதி விவசாயிகளால் அந்த பருத்திக்கு புவி சார் குறியீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
Similar News
News August 29, 2025
தூத்துக்குடி: கிராம உதவியாளர் எழுத்து தேர்வு தேதி மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 77 வருவாய் கிராமங்களில் வருவாய் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் செப்டம்பர் 3ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் இந்த தேர்வு செப்டம்பர் மாதம் 6ம் தேதி நடைபெறும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 29, 2025
தூத்துக்குடியில் இரவு ரோந்து போலீசார் பட்டியல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (28-08-2025) இரவு ரோந்து பணிக்கான காவல்துறை அதிகாரிகள் பட்டியல் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நிரேஸ் இரவு ரோந்து அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் போலீசாரின் விவரங்களும், தொடர்பு எண்களும் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளன.
News August 28, 2025
BREAKING: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அதிரடி மாற்றம்

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த பானோத் ம்ருகேந்தர் லால் இன்று (ஆகஸ்ட்.28) அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய ஆணையராக எஸ்.பிரியங்கா ஐஏஎஸ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.