News January 2, 2025
விதிகளை பின்பற்றதாத நிறுவனங்கள் மூடப்படும் – சிவகங்கை

சிவகங்கை: சுற்றுச்சூழல் வனம் & சூழல் மாறுபாடு அமைச்சகம், மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றுவதற்காக மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகள், 2016-ஐ அறிவித்துள்ளது. எனவே மருத்துவ கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்கள், மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். இல்லையேல், நிறுவனங்களை மூடி அபராதம் விதிக்கப்படும் – ஆட்சியர்
*ஷேர்*
Similar News
News October 14, 2025
மானாமதுரை, காரைக்குடி வழியாக மும்பை எக்ஸ்பிரஸ்

மதுரை ரெயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் செங்கோட்டை-மயிலாடுதுறை ரயில் அக்-16, 17, 18 மற்றும் 22ம் தேதிகளில் செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்பட்டு மானாமதுரை, காரைக்குடி, வழியாக இயக்கப்படும். அதுபோல நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ் அக்-23 மற்றும் 26ம் தேதிகளில் மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்பட உள்ளன என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News October 14, 2025
மானாமதுரை அடையாளம் தெரியாத நபர் விபத்தில் பலி

மானாமதுரை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் கோயில் அருகில் நேற்று இரவு 11 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் TN63BM5965 டூவீலரில் சென்றபோது விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 14, 2025
சிவகங்கை: ஊராட்சி வேலை.. APPLY செய்வது எப்படி?

சிவகங்கை கிராம ஊராட்சி செயலர் பணிக்கு 51 காலியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி : 10th படித்தால் போதுமானது. கடைசி தேதி- நவ.9. முதலில் <