News January 2, 2025

தூத்துக்குடி மீனவர்கள் 10 பேர் இலங்கையிலிருந்து விடுதலை!

image

தூத்துக்குடி தருவைகுளத்தில் இருந்து விசைப்படகில் 12 மீனவர்கள் கடந்த ஜூலை 20ஆம் தேதி மீன் பிடிக்க சென்றபோது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அதேபோல மற்றொரு 10 மீனவர்கள் ஜூலை 23ஆம் தேதியும் கைது செய்யப்பட்டனர். இதில் 2ஆவதாக கைது செய்யப்பட்ட 10 பேர் நேற்று(ஜன.1) விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் பணி நடைபெற்று வருகிறது.

Similar News

News August 30, 2025

தூத்துக்குடி: இரவு ரோந்து காவலர் எண் வெளியீடு

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று இரவு ரோந்து காவல்துறை போலீசாரின் விவரம் மாவட்ட காவல்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக தூத்துக்குடி டிஎஸ்பி மதன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள போலீசார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் தொடர்பு எண் மேலே உள்ள படத்தில் உள்ளது.

News August 29, 2025

திருச்செந்தூர் கோவிலில் தரிசன நேரத்தில் மாற்றம்

image

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் செப்டம்பர் 7, 2025 ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணத்தை முன்னிட்டு பக்தர்கள் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மதியம் 2 மணி வரை மட்டுமே பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அதன் பின்னர், மறுநாள் முதல் மீண்டும் தரிசனம் அனுமதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. *ஷேர்*

News August 29, 2025

தூத்துக்குடி: இலவச தையல் மிஷின் வேணுமா? உடனே APPLY

image

தூத்துக்குடி மக்களே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000க்கும் குறைவாக உள்ளவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலரை (0461 2325606) அனுகலாம். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!