News January 2, 2025
மீண்டும் கேப்டன் ஆக கோலி விருப்பம்

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்க விராட் கோலி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு BGT தொடருடன் தற்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மா ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 2027 வரை டெஸ்ட் போட்டிகள் விளையாட கோலி விரும்புவதாகவும் அடுத்த கேப்டனை தேர்வு செய்யும் வரை தற்காலிக கேப்டனாக செயல்படவும் விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
Similar News
News September 14, 2025
பைக்-ஸ்கூட்டி மோதல் இளைஞர் படுகாயம்!

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கீழ ஆணை கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி 25 இவர் தனது கேடிஎம் பைக்கில் தாந்தோணிமலை ஆர்டிஓ அலுவலகம் அருகே சாலையில் சென்ற போது சித்ராதேவி என்பவர் ஓட்டி வந்த ஸ்கூட்டி மோதி பாலசுப்பிரமணி என்பரவர் கீழே விழுந்து தலையில் படுகாயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தாந்தோணி மலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.
News September 14, 2025
வருத்தம் தெரிவித்தார் விஜய்

பெரம்பலூரில் மக்களிடையே பேசாமல் சென்றதற்காக விஜய் வருத்தம் தெரிவித்துள்ளார். நிச்சயமாக மீண்டும் வேறொரு நாளில் பெரம்பலூர் மக்களை சந்திக்க வருவேன் என்று அவர் உறுதியளித்துள்ளார். திருச்சி, அரியலூரில், தேர்தல் பரப்புரையை கேட்க வந்த தொண்டர்கள், பொதுமக்களுக்கு நன்றி கூறியுள்ளார். மேலும், பரப்புரைக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததாக, அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களையும் விஜய் பாராட்டியுள்ளார்.
News September 14, 2025
BREAKING: அடுத்தடுத்து 2 புயல்கள் உருவாகிறது

TN-ல் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து 2 புயல்கள் உருவாகும் என கூறியுள்ளனர். நடப்பாண்டில் அக்டோபர் 3-வது வாரத்தில் பருவமழை தொடங்கி, ஜனவரி மாதம் வரை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக பருவமழைக்கு முன்பு வடிகால் பணிகளை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பருவமழையை எதிர்கொள்ள ரெடியா?