News March 25, 2024
37 எம்பிக்களுக்கு பாஜகவில் வாய்ப்பு மறுப்பு

பாஜகவின் 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 37 எம்பிக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 111 தொகுதிகளுக்கு பாஜக நேற்று வேட்பாளர்களை அறிவித்தது. அதில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி குமார் செளபே, விகே சிங், வருண் காந்தி உள்ளிட்ட 37 எம்பிக்களின் பெயர் இல்லை. அதேநேரத்தில் நடிகர்கள் கங்கனா, அருண் கோவில் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து சேர்ந்தோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 19, 2025
டி.ஆர்.பாலுவின் மனைவி உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

சென்னை தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், நேரில் அஞ்சலி செலுத்தினார். என் ஆருயிர் நண்பர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி பாலு மறைவால் வேதனையடைந்தேன். ஆர்.பாலு மற்றும் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பொதுவாழ்வில் பயணித்திட அன்பை வழங்கித் துணை நின்ற அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
News August 19, 2025
ஒருமனதாக தேர்வு செய்யலாம்: PM மோடி அழைப்பு

துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை ஒருமனதாக தேர்வு செய்ய எதிர்க்கட்சிகளுக்கு PM மோடி அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் இன்று நடந்த NDA கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி கட்சிகளுக்கு சி.பி.ஆர்-ஐ வேட்பாளராக மோடி முறைப்படி அறிமுகம் செய்தார். இந்நிலையில், தங்கள் வேட்பாளராக Ex SC நீதிபதி <<17451913>>சுதர்சன் ரெட்டியை<<>> I.N.D.I.A. கூட்டணி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News August 19, 2025
யார் இந்த சுதர்சன் ரெட்டி?

INDIA கூட்டணியால் து.ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட 79 வயதான சுதர்ஷன் ரெட்டி தெலங்கானாவின் ரங்காரெட்டியை சேர்ந்தவர். ▶1946-ல் பிறந்த இவர், 2007-2011 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தார். ▶1971-ல் உஸ்மானியா பல்கலையில் பயின்று, சட்ட ஆலோசகர் ▶1995-ல் ஆந்திர HC-ன் நிரந்தர நீதிபதியாகவும், 2005-ல் குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியிருக்கிறார்.