News January 2, 2025

அரூரை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு

image

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் மோப்பிரிப்பட்டி-தொட்டம்பட்டியை இணைத்து, அரூா் பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயா்த்தப்படும் என தருமபுரியில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, அரூரை நகராட்சியாக உருவாக்கம் செய்யப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News

News November 10, 2025

தருமபுரியில் 1,027 பேர் ஆப்சென்ட்!

image

தருமபுரி மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வு மையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு நேற்று (நவ.9) நடைபெற்றது. இதில் மொத்தம் 9,559 பேர் தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. இதில், 8,538 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்ததாகவும், 1,027 பேர் ஆப்சென்ட் ஆனதாகவும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

News November 10, 2025

தருமபுரி: தொடரும் வேட்டை-ரூ.80,000 அபராதம்!

image

காரிமங்கலம் பகுதியில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அர்ஜுன் (28), சந்தோஷ் (30) ஆகியோர் திருப்பத்தூர் பகுதியில் வேட்டையாடிய முயல் கறியை விற்பனைக்காக கொண்டு வந்தனர். அப்போது காரிமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் அவர்களை பிடித்து, பாலக்கோடு வனச்சரகம் கொண்டு வந்து விசாரணை செய்தனர். தருமபுரி மாவட்ட வன அலுவலர் இருவருக்கும் தலா ரூ.40,000 வீதம் மொத்தம் ரூ.80,000 அபராதம் விதித்தார்.

News November 10, 2025

இரவு நேர ரோந்துப் பணி விவரம்

image

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், ராஜ்குமார் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜன் , தோப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் அரிச்சந்திரன் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

error: Content is protected !!