News January 2, 2025
தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் ₹10,956 கோடி

தமிழகத்தில் 2024 டிசம்பர் மாதத்தில் GST வசூல் ₹10,956 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2023 டிசம்பரில் மாநிலத்தில் GST வசூல் ₹9,888 கோடியாக இருந்த நிலையில், 2024ல் 11% அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. அதேநேரம், புதுச்சேரியில் GST வருவாய் 2% சரிந்து ₹288 கோடியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக டிசம்பர் மாதத்தில் GST வரியாக ₹ 1.77 லட்சம் கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது.
Similar News
News September 11, 2025
BREAKING: மிகப்பெரிய என்கவுன்டரில் 10 பேர் மரணம்

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மிகப்பெரிய துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. கரியாபாத்தில் நடந்த இந்த மோதலில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் மாவோயிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் மனோஜ் என்ற மோடம் பாலகிருஷ்ணாவும் ஒருவர் என்றும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், பாதுகாப்பு படை, மாவோயிஸ்டுகளை தொடர்ந்து தேடி வருகிறது.
News September 11, 2025
ராகுல் காந்திக்கு உயிர் மீது அக்கறை இல்லையா?

வெளிநாடு செல்லும் போதெல்லாம் பாதுகாப்பு நடைமுறைகளை மீறுவதாக ராகுல் காந்திக்கு CRPF கடிதம் எழுதியுள்ளது. யாரிடமும் சொல்லாமல் திடீரென வெளிநாடு செல்வதாகவும், பாதுகாப்பு நடைமுறைகளை அவர் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது. முன்னதாக, 2020 – 2022-ல் 113 முறை புரோட்டோகால்களை மீறியதாக கடந்த 2022-ல் CRPF குற்றஞ்சாட்டியது. ராகுலுக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
News September 11, 2025
Beauty: 1 வாரத்தில் கருவளையம் நீங்க செம்ம டிப்ஸ்!

அதிக Stress, டென்ஷனால் கண்ணுக்கு கீழ் கருவளையம் வந்துவிட்டதா? கருவளையம் வந்துவிட்டதே என எண்ணி மேலும் Stress ஆகுறீங்களா? கவலையவிடுங்க. இதனை எளிமையான முறையில் சரி செய்யலாம். உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து அந்த பேஸ்டை கருவளையம் இருக்கும் இடத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இதை ஒரு வாரத்திற்கு செய்து வந்தால் கருவளையம் நீங்கும். SHARE.