News January 2, 2025

அணிகள் இணைப்பு உறுதியாக நடைபெறும்: சசிகலா

image

2025 ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சென்னையில் செய்தியாளர்களை சசிகலா சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2026 சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்பதுதான் எங்களின் இலக்கு. மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் இருக்கின்றன. எங்களின் இருபெரும் தலைவர்களான MGR, ஜெயலலிதாவிட்டு சென்ற பணியை தொடர்ந்து செய்வோம். இந்த ஆண்டில் அணிகள் இணைப்பு உறுதியாக நடைபெறும்” என்றார்.

Similar News

News October 29, 2025

கூட்டணி நிலைப்பாடு: தவெக திட்டவட்டம்

image

தவெக-அதிமுக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டதாக EPS சொன்னது பற்றி தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், கூட்டணி தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பு நாங்கள் என்ன நிலைப்பாட்டில் இருந்தோமோ அதே நிலைப்பாட்டில்தான் தற்போதும் இருக்கிறோம் என் கூறியிருக்கிறார். இதன்மூலம், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை தவெக தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

News October 29, 2025

BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

image

22 கேரட் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ₹3,000 குறைந்து சற்று நிம்மதி அளித்த நிலையில், இன்று ₹2,000 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. காலையில் ₹1,080 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ₹920 அதிகரித்துள்ளது. தற்போது, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ₹11,325-க்கும், 1 சவரன் ₹90,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News October 29, 2025

பட்டா, சிட்டா ஆவணம் .. தமிழக அரசு அறிவிப்பு

image

பட்டா நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்வதை எளிமையாக்க அரசு புதிய இணையவழி விண்ணப்ப வசதியை அறிமுகம் செய்துள்ளது. https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 2 ஆண்டுகளுக்கு முன் CM ஸ்டாலின் தொடங்கிவைத்த இந்த வசதி, தற்போது மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நில அளவைக்கான கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்திக் கொள்ளலாம். SHARE IT

error: Content is protected !!