News January 1, 2025
மதுரை மாநகர் முழுவதும் 14,000 சிசிடிவி கேமராக்கள்

மதுரை மாநகர் முழுவதும் பொதுமக்களின் நலன் கருதி மதுரை மாநகர காவல் துறை மற்றும் வணிக நிறுவனங்கள் குடியிருப்புகளின் பங்களிப்புடன் சுமார் 14,000 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் வணிக நிறுவனங்கள் குடியிருப்பு வீடுகளில் சிசிடிவி பொறுத்த பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருவதாக மாநகர காவல் துறை சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 13, 2026
மதுரை: பட்டாவில் பெயர் மாற்ற ஒரே வழி!

மதுரை மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News January 13, 2026
மதுரை: சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழப்பு.!

மதுரை பாலரெங்காபுரத்தை சேர்ந்தவர் சாந்தி (60). இவர் வீட்டில் பூஜையறையில் சாமி கும்பிடும் போது, அகல் விளக்கில் எரிந்த தீ எதிர்பாராத விதமாக சேலையில் பற்றியது. இதில் தீயில் கருகிய சாந்தியை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று
உயிரிழந்தார். இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 13, 2026
மதுரை: மரத்தில் டூவீலர் மோதி விபத்து; ஒருவர் பரிதாப பலி..

மேலூர், நாவினிபட்டியை சேர்ந்தவர் நாராயணன்(53) உறங்கான்பட்டியில் வெல்டிங் ஷாப் வைத்துள்ளார். நேற்று முன்தினம், இரவு பணி முடிந்து டூவீலரில் தனியாமங்கலம் சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கீழையூர் பைபாஸ் அருகே உள்ள புளிய மரத்தில் டூ வீலர் மோதியது. ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.


