News January 1, 2025
பொங்கல் ரேஸில் இணைந்த ‘காதலிக்க நேரமில்லை’

பொங்கலுக்கு ‘விடாமுயற்சி’ ரிலீஸ் ஆகாததால், சில சின்ன படங்கள் வெளியாக உள்ளன. அந்த வகையில், ஜெயம் ரவி -நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முழு நீள காதல் படமாக உருவாகி உள்ள இப்படத்தை, கிருத்திகா உதயநிதி இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லால், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
Similar News
News October 18, 2025
திராவிடத்திற்கு சீமான் சொல்லும் விளக்கம்

தமிழர் அல்லாதோர் வசதியாகவும், பாதுகாப்பாகவும் ஆள்வதற்கும், வாழ்வதற்கும் கொண்டு வரப்பட்டதே திராவிடம் என்று சீமான் புது விளக்கம் கொடுத்துள்ளார். திராவிட கதைகளை திமுகவினர் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள் என்ற அவர், இளம் தலைமுறையினர் அரசியல் தெளிவு பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். எனவே, முதலில் திராவிடம் என்றால் என்னவென்று CM ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
News October 18, 2025
இந்த அண்ணன மறந்துடாதீங்க..

அப்பா வேற வெள்ளனே கறி வாங்கிட்டாரு, அம்மாவும் வடை சுட்டுட்டு, இட்லி அவிக்க ஆரம்பிச்சிட்டாங்க, நான் வேற உடம்பு முழுக்க எண்ணெய் தேய்ச்சிட்டேன், வேகமா சட்டைய கொடுங்க என்று டெய்லர் கடை வாசலில் வாழ்வில் ஒரு முறையாவது நின்றிருப்போம். இன்றோ ரெடிமேட் துணிகளுக்கு 90% பேர் திரும்பிய நிலையில், டெய்லர்களுக்கு கிடைப்பதோ கிழிந்த துணிகளை தைக்கும் வேலை மட்டுமே. கடைசியாக எப்போது சட்டையை தைத்து அணிந்தீர்கள்?
News October 18, 2025
கூட்டாக 186 சொகுசு கார்கள்.. ஆஃபர் மட்டும் ₹21.22 கோடி!

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற வாக்கியத்தை Jain International Trade Organisation (JITO) நிரூபித்து காட்டியுள்ளனது. 186 உயர்ரக கார்களை வாங்க முடிவு செய்த இந்த அமைப்பினர், ஆஃபருக்காக பல டீலர்களிடம் பேசியுள்ளனர். கடைசியாக ₹149.54 கோடிக்கு இவர்கள் கார் வாங்கியதில், தள்ளுபடியாக மட்டும் ₹21.22 கோடி கிடைத்துள்ளது. கார் மட்டுமின்றி, தங்கம், சொத்து என பலவற்றையும் இவர்கள் கூட்டாகவே வாங்குகின்றனர்.