News January 1, 2025

அரூரில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

image

அரூர்-தர்மபுரி சாலை வனப்பகுதியையொட்டி உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், சந்தன மரம் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கல்லூரி வளாகத்தில் இருந்த, 2 பழமையான சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து, நேற்று அரூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Similar News

News March 18, 2026

தருமபுரி அருகே கட்டிட மேஸ்திரி துடிதுடித்து பலி

image

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே செட்டிஅள்ளியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி சரவணன் (35), கல்கூடப்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த அவர், பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 18, 2026

தருமபுரி: நள்ளிரவில் கட்டு கட்டாக பறிமுதல்

image

தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று நள்ளிரவு 11:20 மணியளவில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறி உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 104 கிராம் எடையுள்ள 4 தங்க நாணயங்களை (மதிப்பு ₹14,10,000) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவை மேலதிக விசாரணைக்காக வருவாய்க் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டன.

News March 18, 2026

தொகுதி நிர்வாகிகளுக்கு ஆ.மணி எம்.பி. இட்ட அதிரடி உத்தரவு!

image

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுவில், வரும் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை ஆ.மணி எம்.பி. வகுத்து அளித்தார். தமிழக அரசின் சாதனைகளை இல்லந்தோறும் கொண்டு செல்லவும், திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்ற இக்கூட்டம், தேர்தல் களத்தில் அதிரடி காட்டத் தயாராகி வருவதைக் காட்டியது.

error: Content is protected !!