News January 1, 2025

சிவகங்கை எம்.பி. தலைமையில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாளை (ஜன.2)  மாலை 3.30 மணி அளவில் நடைபெற உள்ளது என காங்., தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.

Similar News

News October 21, 2025

புதுகை: மழையால் பாதிப்பா? உடனே அழையுங்கள்!

image

புதுகை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மரம் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது, வீடுகள் சேதமடைவது போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் நீங்கள் புகார் செய்யலாம். அவசர கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணில் தகவல்கள் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News October 21, 2025

புதுக்கோட்டை: லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி

image

தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டைக்கு கேசவன் (28) என்பவர் நேற்று பைக்கில் சென்றுள்ளார். அப்போது கந்தர்வகோட்டை சாலையில் அவருக்கு எதிரே லாரியை ஒட்டி வந்த நபர் மோதியதில் கேசவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி தேன்மொழி (26) அளித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 21, 2025

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்!

image

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.21) இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…

error: Content is protected !!