News January 1, 2025
கொள்ளையடிக்க மாச சம்பளம்: சாப்பாடு, தங்குமிடம் FREE

IT-யில் வேலை பார்ப்பவர்களுக்கு இணையாக கொள்ளை கும்பலிலும் சலுகைகள் இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? உ.பி.யில் செல்போன் திருடும் கும்பல் மாதம் ₹15,000, இலவச உணவு, பயணச் செலவு என சலுகைகள் வழங்குகிறது. கொள்ளை சம்பவத்தில் ஒன்றில் கைதான பிறகு, ஜார்கண்டை சேர்ந்த மனோஜ்குமார் என்பவரது இந்த கும்பல் பற்றி தகவல் வெளிவந்துள்ளது. உடனே நெட்டிசன்கள் வேலைக்கு நாங்க வரலாமா? என கலாய்த்து வருகிறார்கள்.
Similar News
News January 8, 2026
அதிமுகவுக்கு பிடிகொடுக்காத பிரேமலதா!

தேமுதிக தங்களுடன் கூட்டணி அமைக்கும் என அதிமுக தரப்பு கூறுகிறது. ஆனால், பிரேமலதா பிடிகொடுக்காமல் உள்ளாராம். கடந்த தேர்தலில், ராஜ்யசபா சீட் கிடைக்காததால், இந்த முறை அதை பெற்றே ஆக வேண்டும் என உறுதியாக இருக்கிறாராம் பிரேமலதா. அதனால் தான், திமுகவுக்கு எதிராக கூட பெரிதாக விமர்சனம் வைக்காமல் இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். பொங்கலுக்கு பிறகு இறுதி முடிவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 8, 2026
BREAKING: விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு.. திமுக அதிர்ச்சி

சில நாள்களாகவே ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் கட்சினர் பேசி வருவதால், காங்.,- திமுக இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது. இதன் பின்னணியில், காங்., தவெக பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜனநாயகன் விவகாரத்தில் பிரவீன் சக்கரவர்த்தி, ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், கிரிஷ் ஷோடங்கர், விஜய் வசந்த் ஆகியோர் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளது இதை உறுதிப்படுத்துகிறதா எனக் கேள்வி எழுந்துள்ளது.
News January 8, 2026
மதிய உணவு சாப்பிட்டாச்சா… இதை பாருங்க!

மதிய உணவுக்கு பின், சிறிது நேரம் ‘Power Nap’ எனப்படும் குட்டித்தூக்கம் போடுவது மன அழுத்தத்தை குறைக்கும் என்கிறது University college london நடத்திய ஆய்வுமுடிவு. இது ஞாபகசக்தியை மேம்படுத்தி, வேலையில் விழிப்புணர்வுடன் இருக்கவும் உதவுகிறதாம். இந்த குட்டித் தூக்கத்தால், இரவுத் தூக்கம் பாதிக்காதாம். ஆனால், இந்த Power Nap, 15-20 நிமிடங்களுக்கு மேல் இருக்கக் கூடாது. இப்பவே, ஆபீஸ் டேபிளில் சாயத் தோணுதா?


