News January 1, 2025

விசுவக்குடி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

image

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடியில் அமைந்துள்ள அணையானது கடந்த மாதம் பெய்த மழையால் முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக ஆங்கில புத்தாண்டான இன்று விடுமுறை என்பதால் மக்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். மேலும் சிறுவர்கள் இளைஞர்கள் வாய்க்காலில் வரும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

Similar News

News January 11, 2026

பெரம்பலூர்: பாதி வழியில் பெட்ரோல் காலியா?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News January 11, 2026

பெரம்பலூர்: நாளை இங்கெல்லாம் மின்தடை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்கூன் மற்றும் கைகளத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.12) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலப்புலியூர், அய்யனார்பாளையம், வெள்ளுவாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 11, 2026

பெரம்பலூர்: காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா தலைமையில், நேற்று (ஜன.10) பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவல்துறை வாகன ஆய்வு நடைபெற்றது. இதில் காவலர்களுக்கு உடற்பயிற்சி, கவாத்து பயிற்சி, மற்றும் துப்பாக்கி பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

error: Content is protected !!