News January 1, 2025
அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா..?

ஒருவழியாக அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை (ஜன.2) அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. 9 நாட்கள் விடுமுறையை கழித்த மாணவர்கள், பள்ளிக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில், நாளை பள்ளி திறந்தால், இரு நாட்கள் மட்டுமே ஸ்கூல் இருக்கும். பிறகு வாரவிடுமுறை வந்துவிடும். எனவே, சொந்த ஊர் சென்றுள்ள மாணவர்களை கருத்தில்கொண்டு, ஜன.6 ஆம் தேதி பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News September 14, 2025
மனம் கவர்ந்த ரிது வர்மா பிக்ஸ்

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தால் கவனம் ஈர்த்த ரிது வர்மா, தற்போது கண் கவர் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்திருக்கிறார். விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்திற்கு பிறகு இவர், தமிழ் படங்களில் கமிட் ஆகாததற்கு காரணம் தெரியவில்லை. மனதை கொள்ளையடித்துவிட்டால் போதுமா.. எப்போது நிரந்தரமாக குடியேற போகிறீர்கள் என ரசிகர்கள் கேட்கின்றனர்.
News September 14, 2025
கமலுக்கு மட்டும் சிறப்பு கவனிப்பு: ரஜினி

கமல்ஹாசனுக்கு மட்டும் சிறப்பு கவனிப்புடன் இளையராஜா பாடல்கள் அமைத்து கொடுத்தாக ரஜினி தெரிவித்துள்ளார். கமல், ரஜினி, விஜயகாந்த் என பலருக்கு ஒரே டைமில் இளையராஜா இசையமைத்துள்ளார். எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாடல்கள் அமைத்து கொடுப்பதாக இளையராஜா சொல்வார், ஆனால் அதில் உண்மையில்லை என்று ரஜினி கூறியுள்ளார். ‘நாயகன்’ பட தென்பாண்டி சீமையிலே பாடலை அவர் பாடினால், அப்போதே ஆயிரம் பேர் அழுதுவிடுவீர்கள் என்றார்.
News September 14, 2025
பெற்றோர்களே, இதை கவனிங்க

பெற்றோர்களே இந்த விஷயங்களையும் கவனியுங்கள்: *குழந்தைக்கு எவர்சில்வர் பாத்திரங்கள், தட்டுகளில் உணவை கொடுத்து பழக்கவும் *தண்ணீர் பாட்டிலை ஸ்டீல் (அ) காப்பரில் வாங்கலாம். வாய் சிறிதான பாட்டில் நல்லது. *பணிக்கு செல்லும் பெற்றோர் ஞாயிறன்று முழு நேரத்தையும் குழந்தையுடன் செலவழியுங்கள் *வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது நல்லது; பாதுகாப்பும் கூட *பிடிக்காத விஷயத்தை செய்ய வற்புறுத்தாதீர்.