News January 1, 2025

நாகையில் இருந்து இலங்கைக்கு போக்குவரத்து ரத்து

image

 காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக அது நிறுத்தப்பட்டது. பின்னர் கூடுதல் பயணிகள் செல்லும் வசதி, கட்டண சலுகை ஆகியவற்றுடன் நாளை 2 ஆம் தேதி முதல் போக்குவரத்து துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கடல் தட்ப வெப்ப சூழ்நிலையால் இலங்கை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News November 3, 2025

34 மீனவர்களுக்கு நீதிமன்ற காவல்; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

image

இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களை கைது செய்துள்ளனர்.
அக்கரைப்பேட்டை மற்றும் நம்பியார் நகரை சேர்ந்த மூன்று விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்ட இம்மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் நவ.17 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News November 3, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1 செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிக்கு ரூ.3,285 மதிப்பீல் காதொலிக்கருவி வழங்கப்பட்டது. பின்னர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 16 பயனாளிகளுக்கு சீர்மரபினர் நலவாரிய அடையாள அட்டையையும் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார்.

News November 3, 2025

நாகை: 12th PASS போதும்! ரூ.71,900 வரை சம்பளம்!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!