News January 1, 2025
தென்மாவட்டங்களில் மீண்டும் வெளுத்து வாங்கிய கனமழை

தென்மாவட்டங்களில் மழை வெளுத்து கட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் ஊத்துவில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதையடுத்து நாலுமுக்கில் 16 சென்டி மீட்டர், காக்காச்சியில் 15 சென்டி மீட்டர், மாஞ்சோலையில் 13 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும், கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு, தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி, நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தலா 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
Similar News
News October 14, 2025
இந்தியாவின் டாப் 5 யூடியூபர்கள் சொத்து மதிப்பு இதுதான்

ஐடி கம்பெனி ஊழியர்களை காட்டிலும் தற்போது நாட்டில் யூடியூப்பில் சம்பாதிப்போரின் வருமானமே அதிகமாக உள்ளது. லட்சங்களில் தொடங்கி சில கோடிகள் வரை மாதம் சம்பாதிக்கும் பல யூடியூபர்கள் இந்தியாவில் உள்ளனர். யூடியூப் மூலம் கோடிகளை சம்பாதிக்க முடியுமா என நீங்கள் நினைக்கலாம். இந்தியாவில் உள்ள டாப் 5 யூடியூபர்களின் சொத்து மதிப்பை பார்த்தால் நீங்களே வியந்துவிடுவீர்கள். மேலே போட்டோஸை SWIPE செய்து பாருங்கள்
News October 14, 2025
BREAKING: தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தமிழக அரசு நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, அக்.20 அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த ஒலி, குறைந்த மாசு ஏற்படுத்தும் பசுமைப் பட்டாசுகளையே வெடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. SHARE IT.
News October 14, 2025
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

பிஹாரில் கூட்டணி ஒப்பந்தத்தின்படி 101 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகின்றது. இந்நிலையில், 71 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. மீதமுள்ள 30 வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. DCM சாம்ராட் சவுத்ரி, தாராப்பூர் தொகுதியிலும், மற்றொரு DCM விஜயகுமார் சின்ஹா, லக்கிசாராய் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். 9 பெண் வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளனர்.