News January 1, 2025

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 180 பேருக்கு தீருதவித் தொகை

image

விழுப்புரம் மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 180 பேருக்கு ரூ.2.37 கோடி தீருதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த 28 நபா்களின் வாரிசுதாரா்களில் 11 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 17 பேருக்கு அரசுப் பணி வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News July 6, 2025

உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

image

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை (04146-226417) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16962564>>தொடர்ச்சி<<>>

News July 6, 2025

கிராம உதவியாளர் வேலை மதிப்பெண் பட்டியல்

image

சைக்கிள் , பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம். ஷேர் பண்ணுங்க

News July 6, 2025

விழுப்புரத்தில் அலுவலக உதவியாளர் வேலை

image

விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பழங்குடி பிரிவினருக்கான ஒரு அலுவலக உதவியாளர் (குறைவுப் பணியிடம்) நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஜூலை 25, 2025 அன்று மாலை 5:00 மணிக்குள் “வேலைவாய்ப்பு விண்ணப்பம் – அலுவலக உதவியாளர், விழுப்புரம்” என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.viluppuram.nic.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

error: Content is protected !!