News January 1, 2025
தூய பனிமயமாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பேராலய ஸ்டார்வின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில், பிறந்திருக்கக் கூடிய புதிய ஆண்டில் கடந்த ஆண்டும் பெருமழை வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வரவும், இனி இது போன்ற பேரிடர்கள் வராமல் பாதுகாத்திடவும், உலக மக்கள் அனைவரும் அமைதியாக பாதுகாப்பாக வாழவும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
Similar News
News October 29, 2025
தூத்துக்குடி மக்களுக்கு மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பில் பொதுமக்கள் குறைகளை நேரில் களையும் வகையில் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தெற்கு மண்டல பகுதி மக்களுக்கான குறை தீர் கூட்டம் நாளை (அக். 30) மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மேயர் ஜெகன் தலைமையில் நடைபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
News October 28, 2025
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News October 28, 2025
கோவில்பட்டி வீரரை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

பஹ்ரைன் Asian Youth Games 2025-ல் இந்தியாவிற்காக 2 வெள்ளிப் பதக்கங்களை கோவில்பட்டியை சேர்ந்த பளுதூக்கும் வீரர் மகாராஜன் ஆறுமுகபாண்டியன் வென்றுள்ளார். இதனை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், கோவில்பட்டி என்றால் இனிப்பு, ஹாக்கி மட்டுமல்ல, பளு தூக்குதலும் இனி நம் நினைவுக்கு வரும்படி சாதனை படைத்துள்ள மகாராஜன் ஆறுமுகப்பாண்டியனுக்கு என் பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்.


