News January 1, 2025

காவல்துறை நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்

image

அரவக்குறிச்சி தாராபுரம் பள்ளபட்டி சாலையில் அரவக்குறிச்சி காவல்துறையினர் கேக் வெட்டி புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர். அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் கோபி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். பொதுமக்கள் ஒரு சிலரும் உடனிருந்தனர். உற்சாகம் அடைந்த அவர்கள் கேக்குகளை முகத்தில் பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆடிப்பாடி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Similar News

News August 11, 2025

கரூர்: மின்வாரிய குறைதீர் நாள் கூட்டம்

image

கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில், வரும் 14ம் தேதி குளித்தலை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திலும், வரும் 21ம் தேதி கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திலும், வரும் 28ம் தேதி மாதாந்திர மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்ட அளவில் நடக்கிறது. இந்த கூட்டம் காலை 11 மணி அளவில் நடைபெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 11, 2025

கரூர் மாவட்ட முட்டை விலை

image

கரூர் மாவட்டம் பகுதிகளில் முட்டைகள் விலை: கோழி முட்டை ரூ.4.65 நாட்டுக்கோழி ரூ.11.00 – ரூ.14.00 காடை முட்டை ரூ.7.00 வாத்து முட்டை ரூ.12.00 – ரூ.15.00 நேற்று நடந்த பண்ணையாளர்கள் வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், முட்டைக்கோழி ஒரு கிலோ, 290 ரூபாய்க்கும், கறிக்கோழி ஒரு கிலோ, 250 ரூபாய்க்கும்
விற்பனை செய்யப்பட்டது.

News August 11, 2025

கரூர்: வெளிநாட்டு வேலை APPLY NOW!

image

கரூர் மக்களே பூட்டான் சுகாதார மருத்துவமனையில் காலியாக உள்ள 100 செவிலியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.sc Nursing டிகிரி படித்திருக்க வேண்டும். இதற்கு, மாதம் ரூ.65,246 முதல் 86,046 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட்-18 கடைசி நாளாகும். உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!