News March 25, 2024

சற்றுமுன்: முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து விலகல்

image

முன்னாள் எம்.எல்.ஏ.வும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமாகா தலைவராகவும் இருந்த கதிர்வேல், அக்கட்சியில் இருந்து திடீரென்று விலகியுள்ளார். தூத்துக்குடியில் தமாகா சார்பில் விஜயசீலன் போட்டியிடும் நிலையில், அதிருப்தியடைந்த கதிர்வேல் கட்சியில் இருந்து விலகியுள்ளார். மேலும், பாஜக கூட்டணியில் சீட் வாங்கி அதனை அதிக விலைக்கு ஜி.கே.வாசன் விற்று வருகிறார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Similar News

News December 8, 2025

தென்காசி: ரயில்வே துறையில் ரூ.42,478 சம்பளத்தில் வேலை ரெடி

image

தென்காசி மக்களே, ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணிகளுக்கான அ|றிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 40 வயதுகுட்பட்ட B.E/B.Tech, B.Pharm படித்தவர்கள் டிச. 25க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.42,478 வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில், ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை வேலை தேடுபவர்களுக்கு SHARE IT.

News December 8, 2025

பள்ளி மாணவி மயங்கி விழுந்து மரணம்

image

தென்காசி, உடையாம்புளி பகுதியில் பள்ளிக்கு புறப்பட்ட 9-ம் வகுப்பு மாணவி பாலகிருஷ்ணவேணி (13) மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பிறக்கும்போது இதயத்தில் பிரச்னை இருந்துள்ளது. அதற்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். இந்நிலையில், இன்று காலை அம்மாவிடம் சொல்லிவிட்டு ஆசை ஆசையாக கிளம்பிய அவர், அப்படியே மயங்கி கீழே விழுந்த உடன் உயிரிழந்துள்ளார்.

News December 8, 2025

அமைச்சர் மீது CM நடவடிக்கை எடுக்கணும்: அண்ணாமலை

image

அமைச்சர் நேரு மேலும் ₹1020 கோடி மோசடி செய்திருப்பதாக <<18501393>>ED கூறியிருப்பது<<>> அதிர்ச்சியளிக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுகவில் பல ஊழல்கள் நடந்திருப்பது ஆதாரங்களோடு அம்பலமாகியிருப்பதாக கூறிய அவர், இந்த ஆட்சியில் கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன் துறைகளே சிறப்பாக செயல்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், மினிஸ்டர் மீது CM உடனடியாக FIR பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!