News January 1, 2025
சரிவை சந்தித்த ஸ்மிருதி… ஏற்றம் கண்ட தீப்தி ஷர்மா!

சர்வதேச மகளிர் ODI கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ICC வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் பட்டியலில், இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (720 புள்ளி) ஒரு இடம் சரிவை சந்தித்து, 3ஆம் இடத்திற்கு வந்துள்ளார். ODI பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஒரு இடம் ஏற்றம் கண்டு 5ஆம் இடத்திற்கு முன்னேறிய தீப்தி ஷர்மா ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளார். அணிகளின் பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது.
Similar News
News October 30, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 504 ▶குறள்: குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். ▶பொருள்: ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வர வேண்டும்.
News October 30, 2025
CSK-வில் வாஷிங்டன் சுந்தர்? அஸ்வின் விளக்கம்

IPL-ல் இருந்து அஸ்வின் ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்க்க CSK-வும், அவரை வாங்க GT அணியும் டிரேட் செய்ய ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்து தனக்கு எந்த தகவலும் வரவில்லை என்று சுந்தர் கூறியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். அதேநேரம், தன்னை வாங்குவது பற்றி CSK, GT அணிகள் பேசியிருக்கலாம் என்றும் சுந்தர் கூறியுள்ளார்.
News October 30, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 30, ஐப்பசி 13 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 130 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: நவமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை


