News January 1, 2025
BRICS உறுப்பு நாடாக புதிதாக இணைந்த 9 நாடுகள்

தாய்லாந்து, கியூபா, பெலாரஸ், உகாண்டா, மலேசியா & உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் BRICS அமைப்பின் உறுப்பு நாடுகளாக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளன. இதன்படி, அந்த அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து பெற்ற நாடுகளின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இதனால், இந்த 9 நாடுகளில் வர்த்தகம், முதலீடு & சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் BRICS நாடுகளுடனான பொருளாதார உறவு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News September 11, 2025
BIG BREAKING: பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்

அன்புமணி மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டுகளும் விசாரணையில் நிரூபணமானதால் பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து அவர் நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியலில் இருக்கவே அன்புமணி தகுதியற்றவர் என கடுமையாக சாடியுள்ளார். அன்புமணியை நீக்குவது வருத்தமாக இருந்தாலும் கட்சியின் நலனுக்காக இந்த முடிவை எடுப்பதாக கூறியுள்ளார்.
News September 11, 2025
தயாரிப்பில் களமிறங்கிய சிம்ரன்

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து மாஸ் காட்டிய சிம்ரன், தற்போது தயாரிப்பில் இறங்கவுள்ளார். ‘போர் டி மோஷன் பிக்சர்ஸ்’ என இந்நிறுவனத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இதன் கீழ் ஆக்ஷன் த்ரில்லர் கதையாக உருவாகும் முதல் படத்தினை ஷியாம் இயக்கவுள்ளார். இதில் சிம்ரன் நடிக்கவுள்ள நிலையில், அவருடன் தேவயானி, நாசர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர்.
News September 11, 2025
‘ஆம்புலன்ஸ்’ அரசியல்.. செக் செய்த EPS

தனது பரப்புரைகளின் போது ஆம்புலன்ஸ்களை கொண்டு திமுக அரசு இடையூறு செய்தால், அதன் டிரைவரே ஆம்புலன்ஸில் செல்ல நேரிடும் என EPS கடுமையாக சாடினார். இந்த விவகாரம் பூதாகரமாக, அதிமுகவே ஆம்புலன்ஸில் செல்லும் நிலை வரும் என பதிலடி கொடுத்தார் உதயநிதி. இந்நிலையில், அந்த ஆம்புலன்ஸ் டிரைவரின் செல்போனை சோதித்ததில் நோயாளியிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை, இது திமுகவின் தந்திரம் என EPS குற்றஞ்சாட்டியுள்ளார்.