News January 1, 2025
பொற்கால ஆட்சியை மீண்டும் அமைப்போம்: இபிஎஸ்

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, அதிமுக பொது செயலாளர் இபிஎஸ் வாழ்த்து வெளியிட்டுள்ளார். அதில் அவர், புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற புத்தாண்டு,மக்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று கூறியுள்ளார். மேலும், பொற்கால ஆட்சியை மாநிலத்தில் மீண்டும் அமைப்போம் என இந்நாளில் சபதமேற்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News October 21, 2025
காதலை நாசுக்காக சொன்ன சமந்தா!

பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமோருவும் சமந்தாவும் காதலிப்பதாக தொடர்ந்து பல செய்திகள் வெளிவந்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், இது குறித்து இருவரும் எந்த ஒரு ரெஸ்பான்ஸும் தரவே இல்லை. இந்த சூழலில்தான், ராஜுடன் தீபாவளி கொண்டாடும் போட்டோஸை வெளியிட்டு, ‘Feeling Grateful’ என சமந்தா பதிவிட்டுள்ளார். தங்களின் காதலை நாசுக்காக சமந்தா வெளிப்படுத்தி இருக்கிறார் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
News October 21, 2025
அதிமுக கூட்டணியில் இணையப்போகிறதா விசிக?

அதிமுக அழியக்கூடாது என்று திருமா தொடர்ச்சியாக அட்வைஸ் செய்வது கூட்டணி கணக்குக்காக அல்ல என MP ரவிக்குமார் கூறியுள்ளார். அதிமுகவை அழித்துவிட்டு அவ்விடத்தை பாஜக பிடிக்க நினைப்பதாகவும், இந்த சதித்திட்டத்துக்கு அதிமுக ஆளாகிறதே என்ற ஆதங்கத்தில்தான் அப்படி சொல்வதாகவும் கூறினார். மேலும், EPS-க்கு சமூகநீதி மீது எந்த பற்றும் இல்லை என்ற அவர், அதிமுக என்ன ஆஃபர் கொடுத்தாலும், அங்குபோக வாய்ப்பே இல்லை என்றார்.
News October 21, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹2,080 உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.21) ஒரே நாளில் சவரனுக்கு ₹2,080 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ₹260 உயர்ந்து ₹12,180-க்கும், சவரன் ₹97,440-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாள்களில் சவரனுக்கு ₹2,240 குறைந்திருந்த நிலையில், <<18060775>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவதால், இந்தியாவிலும் அதன் தாக்கம் மீண்டும் எதிரொலித்துள்ளது.