News January 1, 2025
கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட எஸ்.பி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் 2025 ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா கேக் வெட்டி காவல்துறையினர் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி புத்தாண்டை வரவேற்று கொண்டாடினார். இதில் ஏராளமான காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
Similar News
News September 14, 2025
திருப்பத்தூர்: ஊர்காவல்படையில் சேர எஸ்.பி அழைப்பு

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி சியாமளா தேவி வெளியிட்ட செய்தி குறிப்பில், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆண்கள் -4 பெண்கள் -2 என 6 ஊர்காவல்படை பணிகள் காலியாக உள்ளதாகவும், அதற்கு விண்ணபிக்க விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பாச்சல் பகுதியில் உள்ள ஊர்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News September 14, 2025
திருப்பத்தூர: இன்று இரவு ரோந்து பணி

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (செப் 13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News September 13, 2025
வாகனங்களில் பயணிப்போருக்கு எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (13-09-2025) மாவட்ட மக்களுக்கு வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் ”மக்கள் தங்களின் பயணத்தின்போது ஜன்னல் வழியாக பயணிகள் கை, கால், தலையை நீட்டாதீர்கள் உங்களுடைய கவனக்குறைவால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது” என எச்சரிக்கையாக இருக்க காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.