News January 1, 2025
புதிய ஆண்டு, புதிய நம்பிக்கைகள்: CM வாழ்த்து

புத்தாண்டு பிறப்பையொட்டி, CM ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் புதிய ஆண்டு, புதிய நம்பிக்கைகள் எனக் குறிப்பிட்டு வாழ்த்தை பகிர்ந்துள்ளார். அதில், 2025இல் உதய சூரியன் உதயமாகும்போது, அன்பு, சமத்துவம், முன்னேற்றத்துடன் 2024-இன் வெற்றிகளைக் கட்டியெழுப்புவோம் என கூறியுள்ளார். அனைவருக்கும் ஒற்றுமை, சாத்தியங்கள் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 20, 2026
BREAKING: விஜய் புதிய அறிவிப்பு

தவெக தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் பனையூரில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில், தேர்தல் பிரசார குழுவினர் மட்டுமே பங்கேற்பர் என விஜய்யின் ஒப்புதலோடு தெரிவிப்பதாக புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்டுள்ளார். இதில், மாநில & மாவட்ட வாரியாக 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட இருக்கிறது.
News January 20, 2026
மார்ச் 8-ம் தேதி திருச்சியில் திமுக மாநாடு

சென்னையில் இன்று நடைபெற்ற திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற பெயரில் திருச்சியில் மார்ச் 8-ம் தேதி, 10 லட்சம் தொண்டர்கள் கூடும் அளவுக்கு மாநாட்டை நடத்தும் தீர்மானமும் ஒன்று. இதேபோல் மாநாட்டை தொடர்ந்து வீடு வீடாக சென்று திமுகவின் சாதனைகளை பிரசாரம் செய்யவும் திமுக திட்டமிட்டுள்ளது.
News January 20, 2026
நடிகர் தனுஷுடன் காதல்.. சர்ச்சையில் சிக்கிய நடிகைகள்

நடிகர் தனுஷும், நடிகை மிருணாள் தாகூரும் காதலித்து வருவதாகவும், பிப்.14-ல் திருமணம் நடக்கவிருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இதற்கு இருதரப்பினரும் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், தனுஷுடன் காதலில் இருப்பதாக ஏற்கெனவே சில நடிகைகள் சர்ச்சையில் சிக்கி இருக்கின்றனர். ஆனால், அவையெல்லாம் வதந்திகளாகவே முடிவடைந்துள்ளன. அந்த நடிகைகளின் போட்டோக்கள் மேலே கொடுத்துள்ளோம்.


