News January 1, 2025

ஹேங்கோவர் ஆகிட்டிங்களா? இதைச் செய்யுங்க!

image

புத்தாண்டு கொண்டாட்டத்தில் எவ்வளவு குடிக்கிறோம் என்ற அளவு தெரியாமல், அதிகமாக குடித்துவிட்டு பலர் ஹேங்கோவர் ஆகியிருப்பர். தலைவலி, குமட்டல், அஜீரணம், சோம்பல், வயிற்றுவலி ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இதுபோல ஹேங்கோவர் ஆனவர்கள் ஏலக்காய், இஞ்சி டீ குடித்தால் மனம் ரிலாக்ஸ் ஆகும். எலுமிச்சை சாறுடன், மோர் கலந்து சாப்பிட்டால் குமட்டல் நிற்கும். அதிக தண்ணீர் குடிப்பதும், பழங்கள் சாப்பிடுவதும் பலன் தரும்.

Similar News

News September 11, 2025

ஆக்‌ஷன் ஹீரோ ஆகிட்டீங்க SK: ரஜினி புகழாரம்

image

தனது ரோல் மாடலான ரஜினிகாந்திடம் இருந்து ஒரு அளப்பரிய அன்பு கொண்ட பரிசை சிவகார்த்திகேயன் பெற்றுள்ளார். ‘மதராஸி’ படம் பார்த்த பின்பு SK உடன் தொலைபேசியில் பேசிய ரஜினி, ‘My God’ ஆக்‌ஷனில் கலக்கியிருப்பதாக பாராட்டியுள்ளார். முக்கியமாக, ‘ஆக்‌ஷன் ஹீரோ ஆகிட்டீங்க SK’ என்று ரஜினி தெரிவித்ததாக நெகிழ்ந்துள்ளார். தனது டிரேட்மார்க் சிரிப்பால் வாழ்த்தியதாகவும் SK, தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

News September 11, 2025

CM ஸ்டாலின் வீட்டில் துயரம்.. தலைவர்கள் நேரில் அஞ்சலி

image

CM ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி(80) உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை OMR-ல் உள்ள ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நள்ளிரவில் அவரது உயிர் பிரிந்தது. வேதமூர்த்தியின் உடல் கொட்டிவாக்கம் AGS காலனியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொழிலதிபர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

News September 11, 2025

SPORTS ROUNDUP: Boxing-ல் இந்திய வீராங்கனை அசத்தல்!

image

*உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: மகளிர் 80 கிலோ பிரிவில் நுபுர் ஷியாரன்(IND) 4-1 என சோடிம்போவாவை (உஸ்பெகிஸ்தான்) தோற்கடித்து Semi-க்கு முன்னேறினார்.
*உலக கோப்பை கால்பந்து: தகுதிச்சுற்றில் ஈகுவடாரிடம் 1- 0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா தோல்வி. இப்போட்டியில் மெஸ்ஸி விளையாடவில்லை.
*Pro kabbadi: யு மும்பா அணியை 45-37 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தெலுகு டைட்டன்ஸ்.

error: Content is protected !!