News January 1, 2025

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

image

புதிய கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும் 2025ஐ ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். 2024ல் கற்றுக்கொண்ட வாழ்க்கை பாடங்களோடு புத்தாண்டை நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் வரவேற்போம். வரும் காலங்கள் நம்முடையதே என்ற நம்பிக்கையோடு அடியெடுத்து வைப்போம். எதற்கும் அசராத பேராற்றலாக உருவாக வேண்டும் என்பதைக் குறிக்கோளாக கொண்டு, இந்நொடியை மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் தொடர்வோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

Similar News

News August 14, 2025

இந்தியாவிற்கு வரியை மேலும் உயர்த்துவோம்: USA மிரட்டல்

image

டிரம்ப் – புடின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், இந்திய பொருள்களுக்கு மேலும் வரியை அதிகரிப்போம் என அமெரிக்க கருவூலத்துறை செயலாளர் ஸ்காட் பெசண்ட் எச்சரித்துள்ளார். உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக டிரம்ப் – புடின் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். முன்னதாக, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி, போரில் ரஷ்யாவிற்கு உதவுவதாக கூறி இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரிவிதித்தது.

News August 14, 2025

இணையத்தில் டிரெண்டாகும் #பாசிசக்கோமாளி_ஸ்டாலின்

image

தூய்மை பணியாளர்கள் கைது விவகாரத்தில் அரசுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், X தளத்தில் #பாசிசக்கோமாளி_ஸ்டாலின் டிரெண்டாகி வருகிறது. அதில், திமுக அரசு மற்றும் CM ஸ்டாலினுக்கு எதிராக பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 16,000 பேருக்கு மேல் கருத்து பதிவிட்டு இந்திய டிரெண்டிங்கில் இடம் பிடித்த நிலையில், தற்போது திமுக ஐடி விங் தரப்பினர், அரசுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

News August 14, 2025

சில மணி நேரத்தில் ஆன்லைனில் கசிந்தது ‘கூலி’

image

ரஜினி நடிப்பில் இன்று வெளியாகி தியேட்டர்களை திருவிழாக் கோலமாக மாற்றியுள்ள கூலி திரைப்படம், சில மணிநேரங்களிலேயே ஆன்லைனில் கசிந்துள்ளது. படத்தின் HD PRINT தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட டோரண்ட் இணையதளங்களில் இலவசமாக டவுன்லோடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை ஆன்லைனில் வெளியிட 36 இணையதளங்களுக்கு ஐகோர்ட் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!