News December 31, 2024
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச 31) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100
Similar News
News August 13, 2025
பள்ளி வளாகத்தில் மது பிரியர்களின் அட்டகாசம்

ஆற்காட்டில் அமைந்துள்ள சரஸ்வதி தனகோட்டி ஆரம்பப்பள்ளி வாசலிலேயே சமூக விரோதிகள் இரவு நேரங்களில் மது அருந்துவதும், அந்த மது பாட்டில்களை பள்ளி வளாக வாசலில் வீசி செல்கின்றனர். மேலும் அங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பெரிதும் சிரமம் அடைகின்றனர். இதை துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
News August 13, 2025
ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

ராணிப்பேட்டை காவல் துறை சார்பில் தினமும் விழிப்புணர்வு செய்தி பதிவிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பாதசாரிகள் கவனமாக இருக்கவும், சீட் பெல்ட்டை பயன்படுத்தவும், போக்குவரத்து விதிகள்& விதிமுறைகளைப் பின்பற்றவும், தூக்கம் வந்தால் வாகனம் ஓட்ட வேண்டாம், ஹெல்மெட் அணியுங்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் போன்றவற்றை விளக்கும் வகையில் பதிவிட்டுள்ளது. இதை ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!
News August 13, 2025
ராணிப்பேட்டை கூட்டுறவு வங்கிகளில் வேலை!-APPLY NOW

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையில் இயங்கும் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2,500 காலிப் பணியிடங்கள் உள்ளன. ராணிப்பேட்டையில் 45 பணியிடங்கள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள் <