News March 25, 2024
தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 26, 2025
ராமநாதபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் திட்ட விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களின் கோரிக்கைகளை மனுவாக பெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் இன்று (செப். 26) இராமநாதபுரம் நகராட்சி – வி.எஸ்.மஹால், மண்டபம் வட்டாரம் – பஞ்சாயத்து அலுவலகம், பாம்பன், பரமக்குடி வட்டாரம் – ஊராட்சி அலுவலக கட்டிடம், மொசுக்குடி, ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. ஆதார் அட்டை திருத்தம், குடும்ப அட்டை திருத்தம், பட்டா மாற்றம் போன்ற கோரிக்கைகளை முகாமில் மனுவாக அளிக்கலாம்.
News September 25, 2025
ராமநாதபுரம் இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (செப். 25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.
News September 25, 2025
பரமக்குடியில் வருவாய்த் துறை அலுவலர்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளை புறக்கணித்தும்
மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்ப்பந்தம் செய்வதை உயர் அலுவலர்கள் கைவிட வேண்டும் என வலியுறுத்தி பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் வருவாய்துறை அலுவலர்கள் 100-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.