News December 31, 2024
பகிரங்க மன்னிப்பு கேட்ட மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்

மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் வன்முறைச் சம்பவங்களுக்காக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். நடந்த அனைத்து துயரங்களுக்காகவும் வருந்துவதாக கூறிய அவர், இந்த ஆண்டு மணிப்பூர் மக்களுக்கு துரதிர்ஷ்டவசமானது என்றார். 2025ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பும் என்றும், அதற்கான முயற்சியை எடுத்து வருவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News October 17, 2025
சற்றுமுன்: விஜய் அதிரடி உத்தரவு

கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து விஜய்யின் தேர்தல் பரப்புரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. தீபாவளிக்கு பிறகு கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க முடிவெடுத்துள்ள அவர், பரப்புரை பயணத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டு வருகிறார். அதற்கான பணிகளை மேற்கொள்ள தவெக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முதல் மாநிலம் வரையிலான நிர்வாகிகள் நியமனத்தை விரைந்து முடிக்கவும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
News October 17, 2025
சாதி படுகொலைகள் மனதை காயப்படுத்துது: CM

தமிழ்நாட்டில் நடக்கும் ஆணவப்படுகொலைகள் மனதை காயப்படுத்துவதாக CM ஸ்டாலின் பேரவையில் வேதனை தெரிவித்துள்ளார். ஒருவர் இன்னொருவரை கொல்வதை எக்காரணத்தை கொண்டும் ஏற்கமுடியாது என்ற அவர், தமிழ் மண்ணில் ஒற்றுமை உணர்வு உரக்க ஒலிக்கவேண்டும் என கூறியிருக்கிறார். மேலும், உலகம் முழுக்க பெருமிதத்தோடு வாழும் தமிழ் சமூகம் உள்ளூரில் சண்டையிட்டுக் கொள்ளலாமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News October 17, 2025
ஹாட்ரிக் அடித்தாரா PR.. டியூட் ரிவ்யூ!

கதை: திருமண நாளில் வேறொருவரை காதலிப்பதாக மமிதா, பிரதீப்பிடம் கூற அடுத்தடுத்து நடக்கும் கலாட்டாவே இந்த ‘டியூட்’. ப்ளஸ்: PR வழக்கம் போல அசத்தி விட்டார். பல இடங்களில் சரத்குமார் ஸ்கோர் செய்கிறார். மமிதா ஓகே. முதல் பாதி பயங்கர Fun. சாய் அபயங்கரின் இசை ஈர்க்கிறது. பல்ப்ஸ்: சுவாரசியமே இல்லாத 2-ம் பாதி. சூப்பராக ஆரம்பித்து, சுமாராக முடிந்தான் ‘டியூட்’.