News December 31, 2024

நாளை முதல் இந்த வங்கிக் கணக்குகள் செயல்படாது

image

மோசடி உள்ளிட்டவற்றை தடுக்க வங்கிக் கணக்கு தொடர்பாக ரிசர்வ் வங்கி புதுப்புது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, நாளை (ஜன.1) முதல் 3 வகை வங்கிக் கணக்குகள் செயல்படாது எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது, 2 ஆண்டுகள் (அ) கூடுதலான நாள்கள் பரிவர்த்தனை இல்லாத வங்கிக் கணக்குகள், 12 மாதத்திற்கு மேல் பயன்படுத்தப்படாத கணக்குகள், குறிப்பிட்ட காலத்திற்கும் மேல் கணக்கில் பணமில்லாத வங்கிக் கணக்குகள் செயல்படாது.

Similar News

News October 15, 2025

13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

image

TN-ல் 13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி, தேனி, தென்காசி, குமரி, நெல்லையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தருமபுரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம். தற்போது, தேனி, புதுக்கோட்டை, நெல்லையில் பரவலாக மழை பெய்து வருகிறது.

News October 15, 2025

UPI: இந்தியாவில் எது டாப் தெரியுமா?

image

தற்காலத்தில் கையில் காசு வைத்துக் கொள்ளும் பழக்கம் மறைந்துவருகிறது. எல்லாவற்றுக்கும் UPI மூலம் பணம் செலுத்துகிறோம். இந்தியாவில் செப்டம்பர் 2025 நிலவரப்படி, 19.63 பில்லியனுக்கும் அதிகமான டிரான்சாக்‌ஷன் நடந்துள்ளன. இதில் PhonePe 48.38% பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. GPay 35.08%, Paytm 5.83% அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மற்ற நிறுவனங்கள் – 10.71%. ஆகவுள்ளது. நீங்கள் எந்த UPI யூஸ் பண்றீங்க?

News October 15, 2025

கொலை வழக்கில் பாஜக நிர்வாகிக்கு ஆயுள் தண்டனை

image

கோவையில் இளைஞர் கொலை வழக்கில் பாஜக மண்டலத் துணை தலைவர் கந்தசாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2018 -ல் விநாயகர் சதுர்த்தி நன்கொடை வசூல் தொடர்பான மோதலில் நாகராஜ் என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதில் கந்தசாமி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு கோவை மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனையுடன், ₹10,000 அபராதமும் விதித்துள்ளது.

error: Content is protected !!