News December 31, 2024
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி இன்று பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்து நிலையம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா, பேருந்து நிலையத்தில் குப்பைகள் அகற்றப்படுகிறதா என்றும், பொதுக்கழிப்பறை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார். இதில் நகராட்சி ஆணையர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News February 26, 2026
மயிலாடுதுறை மக்களே.. CM Cell-ல் புகார் அளியுங்கள்!

மயிலாடுதுறை மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே <
News February 26, 2026
மயிலாடுதுறையில் நாளை தொடங்குகிறது புத்தகத் திருவிழா!

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் பள்ளி கல்வித்துறை பொது நூலக இயக்ககம் சார்பில், மயிலாடுதுறை 4வது புத்தகத் திருவிழா நாளை(பிப்.27) தொடங்குகிறது. தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த புத்தக திருவிழா மார்.8 ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இதனை நாளை கலெக்டர் தலைமையில் அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தொடங்கி வைக்க உள்ளார்.
News February 26, 2026
மயிலாடுதுறை: தேதி மாற்றம் – ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(பிப்.26) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில், அரசு சார்ந்த நிர்வாக காரணங்களால் நாளை நடைபெற இருந்த கூட்டம் மார்ச் 3-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.


