News December 31, 2024

உடனடியாக பதவி விலக வேண்டும்: பினராயி

image

கேரளாவை மினி பாகிஸ்தான் என்று கூறிய மகாராஷ்டிரா அமைச்சர் நிதிஷ் ரானேவுக்கு, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தின் மீது எடுத்துக்கொண்ட உறுதி மொழியை அமைச்சர் மீறியுள்ளதாகவும், சங்பரிவாரால் திட்டமிடப்பட்டு பரப்பப்படும் வெறுப்பு பரப்புரைகளை கேரள மக்கள் நிச்சயம் முறியடிப்பார்கள் என்றும் கூறினார். நிதிஷ் உடனடியாக பதவி விலகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News August 21, 2025

Health Tips: சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜில் வைத்தால் விஷமா?

image

சப்பாத்தி மாவை பிசைந்த பிறகு அதை சமைக்காமல் ஃப்ரிட்ஜில் வைக்கிறோம். இவ்வாறு செய்வதால் அது விஷமாகும் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஃப்ரிட்ஜின் குளிர்ந்தநிலை பூஞ்சை வளர்ச்சியை மெதுவாக்குகிறது. இதனால் காற்று புகாத அளவுக்கு மாவை pack செய்து, அதை 1 நாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம் எனவும், 2 நாள்களை தாண்டினால் அது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

News August 21, 2025

INDIA கூட்டணியின் ஒரே அரசியலமைப்பு ‘ஊழல்’

image

‘PM, CM பதவி பறிப்பு’ மசோதாவை ‘கருப்பு மசோதா’ என CM ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இந்நிலையில், 130-வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஆச்சரியமல்ல என அண்ணாமலை தெரிவித்துள்ளார். உங்கள் கூட்டணி (INDIA) உண்மையிலேயே பின்பற்றும் ஒரே அரசியலமைப்பு ஊழல் மட்டுமே என்றும் அவர் விமர்சித்துள்ளார். செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக திமுக அரசு தக்க வைத்ததாகவும் சாடியுள்ளார்.

News August 21, 2025

SPORTS ROUNDUP: துப்பாக்கி சுடுதலில் இந்தியருக்கு தங்கம்!

image

◆ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: ஸ்கீட் பிரிவில் அனந்த்ஜீத் சிங் நருகா(இந்தியா) 57 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
◆Sinquefield cup Chess: நோடிர்பெக்கை(உஸ்பெகிஸ்தான்) வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்றார்.
◆அமெரிக்க ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவில் இகா ஸ்வியாடெக்(போலந்து), காஸ்பர் ரூட்(நார்வே) ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்.
◆ICC பவுலர் தரவரிசை: கேசவ் மகாராஜ்(SA) முதல் இடம் பிடித்தார்.

error: Content is protected !!