News December 31, 2024
அரசுக்கு எதிராக முகநூலில் பதிவிட்ட காவலர் சஸ்பெண்ட்

வேலூர் தாலுக்கா காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்த அன்பரசன் தனது முகநூல் பக்கத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரம் தொடர்பாக அரசுக்கு எதிராக வெளியான பதிவுக்கு ஆதரவாக தனது கருத்து பதிவு செய்துள்ளார். இது குறித்து மாவட்ட காவல் அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக அன்பரசனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News October 26, 2025
வேலூர்: இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்!

பிரதம மந்திரி ரோஸ்கர் யோஜனா (PMRY) திட்டம், 1993ல் தொடங்கப்பட்டது. படித்த வேலையற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியக் கடன் வழங்குகிறது. உற்பத்தி, சேவை, வர்த்தகத் துறைகளில் கடன் வழங்கப்படும். 18-35 வயது வரையிலான, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.15% வரை மானியமும், தொழில் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். மாவட்ட தொழில் மையங்கள் மூலம்<
News October 26, 2025
வேலூர்: மத்திய அமைச்சர் வருகையால் சலசலப்பு

வேலூரில், நேற்று (அக்.25) விவசாயிகளுடன் கலந்துரையாடுவதற்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் காலை வருவதாக தெரிவித்தனர். ஆனால், அவர் தாமதமாக வந்த நிலையில், வந்திருந்த விவசாயிகளுக்கு உணவு வழங்கப்படவில்லை. பின் விவசாயி ஒருவர், கோபத்துடன் ‘நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது தமிழக அரசு. அவர்களிடம் கேட்காமல், டில்லியில் இருந்து வரும் மத்திய அமைச்சரிடம் சாப்பாடு கேட்கலாமா? எனக் சுட்டிக்காட்டினார்.
News October 26, 2025
வேலூர்: வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்

வேலுார் மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் வரும் 27-ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கிறது. இந்த முகாம் துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் நடக்கிறது. புதன் மற்றும் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படும். 95 ஆயிரத்து 281 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது என மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


