News December 31, 2024

தபால் நிலைய ஊழியர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு

image

கரூர் மாவட்டத்தில் 100 நாட்கள் காசநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. இதன் அடிப்படையில் கரூர் தலைமை தபால் நிலைய ஊழியர்களுக்கு காசநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பது குறித்து இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர் நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தின் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Similar News

News October 15, 2025

கரூர் மாணவிகளுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி

image

கரூர் மாவட்டத்தில் தமிழக அரசு மூன்று மாத கால கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி வழங்குகிறது. விருப்பமுள்ளோர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 22.10.2025-க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்தார்.

News October 14, 2025

கரூர்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (24.10.2025) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News October 14, 2025

கரூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

image

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Production Assistant பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000-ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!