News December 31, 2024

எம்.எல்.ஏ ஈஸ்வரன் தமிழக அரசுக்கு வேண்டுகோள்

image

2025ஆம் ஆண்டுக்கான தைப்பொங்கல் வாழ்த்துக்களை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலையை முழுமையாக கொடுக்க வேண்டும் என்றும், அரசு இதில் விரைந்து நடவடிக்கை வேண்டும் என்று இன்று  வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News January 9, 2026

நாமக்கல்: வீட்டில் சிலிண்டர் இருக்கா?

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். (ஷேர் செய்யுங்கள்)

News January 9, 2026

ராசிபுரத்தில் சம்பவ இடத்திலேயே பெண் பலி!

image

ராசிபுரம் அணைப்பாளையத்தை சேர்ந்தவர் லட்சுமி(60).இவர் நேற்று மாலை, சக்திநகரில் உள்ள பேத்தியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.பின் அங்கிருந்து பஸ் மூலம் வீட்டிற்கு செல்ல ஆண்டகலூர் கேட்டிற்கு சாலையோரமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த கார் லட்சுமி மீது மோதியது.இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

News January 9, 2026

திரைபடத்தில் களம் இறங்கிய நாமக்கல் எம்பி!

image

திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமாா் கதாநாயகனாக நடிக்கும் ‘டெலிவரி பாய்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் நடித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவது: அரசியலுக்கு வருவதற்கு முன்பே சிறு, சிறு வேடங்களிலும் நடித்துள்ளேன். அந்த வகையில் டெலிவரி பாய் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அதனால் ஏற்றுக்கொண்டு நடித்தேன் என்றார்.

error: Content is protected !!