News December 31, 2024
அண்ணாமலைக்கு டெல்லியில் இருந்து வந்த அட்வைஸ்!

அண்மையில் டெல்லி சென்ற அண்ணாமலைக்கு அமித் ஷா போட்ட உத்தரவின் வெளிப்பாடே நேற்று அதிமுகவின் யார் அந்த சார்? போஸ்டர் போராட்டத்திற்கு ஆதரவான நிலைப்பாடு என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அத்துடன், தமிழகத்தில் வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் உங்களால் எந்தக் கூட்டணிக் கதவும் அடைபடக்கூடாது என்றும் அண்ணாமலைக்கு அட்வைஸ் வந்துள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. இத பத்தி உங்க கமெண்ட் என்ன?
Similar News
News September 13, 2025
பெட்ரூமில் இதை செய்யாதீங்க!

படுக்கை அறையில் நாம் வைக்கும் சில பொருள்கள் வாஸ்துப்படி தீமைகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அவை: *டீ, காபி கப், சாப்பிட்ட தட்டுகள் உள்ளிட்ட கழுவப்படாத பாத்திரங்கள் *தலையணைக்கு கீழே பேப்பர், புத்தகம், தங்க நகைகள் *படுக்கையில் எலக்ட்ரானிக் கேட்ஜெட்கள், செல்லப்பிராணி. இவை தூக்கத்தை பாதிப்பதுடன், நெகடிவ் எனர்ஜியை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல படுக்கைக்கு நேராக கண்ணாடி இருக்கக் கூடாது.
News September 13, 2025
பாகிஸ்தான் வெற்றி பெற சரியான தருணம்: மிஸ்பா

விராட் கோலி இல்லாததால், இதுவே இந்திய அணியை வீழ்த்த சரியான தருணம் என மிஸ்பா உல் ஹக் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக பெரிய தொடர்களில் விராட் மற்றும் ரோஹித் இல்லாமல் இந்தியா விளையாடவில்லை என கூறிய அவர், டாப் ஆர்டரை காலி செய்தால் பாகிஸ்தானுக்கு வெற்றி எளிதாக கிடைக்கும் எனவும் கூறினார். பாகிஸ்தானின் பந்துவீச்சு நிச்சயம் இந்தியாவுக்கு பெரும் தலைவலியாய் இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News September 13, 2025
இளையராஜாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஸ்டாலின்

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இசைஞானி கலைத் தாய்க்கு மட்டுமல்ல, தமிழ் தாய்க்கும் சொந்தக்காரர் என புகழாரம் சூட்டிய அவர், அரை நூற்றாண்டாக இளையராஜா பாடல்களை முணுமுணுக்காத உதடுகளே இல்லை என பாராட்டினார். கருணாநிதிக்காக இளையராஜா தனது பிறந்தநாளையே மாற்றினார் எனவும், அவர் இளையராஜா அல்ல, இணையற்ற ராஜா என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.